தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு! - இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 9 பேர் ஒமைக்ரான் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Omicron
Omicron

By

Published : Dec 5, 2021, 9:46 PM IST

டெல்லி : கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில் புதிதாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

இங்கிலாந்தில் இந்த வைரஸ் தொற்று காரணமாக இது வரையில் சுமார் 160 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடரந்து வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருவபர்கள் கண்காணிக்கப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!

மேலும் இது குறித்து மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ஒமைக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வோடு கண்காணிக்கும் படி அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் கர்நாடகா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் 8 பேருக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 9 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : அச்சுறுத்தும் ஒமைக்ரான்; இன்றைய கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details