பன்ஸ்வாரா:ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தில் பனியாலா என்ற கிராமத்தில், நேற்று(செப்.18) மாலை பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.
அப்போது உணவுடன் வழங்கப்பட்ட இனிப்பை சாப்பிட்டதும் ஏராளமான மக்களுக்கு உடல்நிலை மோசமடைந்தது. குழந்தைகள் உள்பட 125-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாக அலுவலர்கள், உடனடியாக கிராமத்துக்குச்சென்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.