தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காப்பீட்டு தொகைக்காக தந்தையை கொன்ற மகன் - காப்பீட்டு தொகைக்காக கொலை

ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்காக தந்தையை கொலை செய்த இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajasthan man kills father
Rajasthan man kills father

By

Published : Dec 29, 2021, 7:30 PM IST

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே மோகாம் சிங் என்பவரது உடல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து காவலர்கள் அவரது மகன் ராஜேஷ் சிங்கிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

சந்தேகமடைந்த காவலர்கள் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அதாவது, உயிரிழந்த மோகாம் சிங் தனது பெயரில் 4 லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்.

அந்தப் பணத்திற்காக, ராஜேஷ் சிங் தனது நண்பர்கள் ராஜேஷ், விஜேந்திரா, கன்ஹா மூவருடன் சேர்ந்து தனது தந்தையையே கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தந்தையை கொன்ற மகன் கைது

ABOUT THE AUTHOR

...view details