ஹைதராபாத்:தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் நடைபெறும் தேதிகளைக் கடந்த அக்.09-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
சத்தீஸ்கரில் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 17-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23-ஆம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதியும், மிசோரத்தில் நவம்பர் 7-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ராஜஸ்தானில் நவம்பர் மாதம் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தேர்தல் நடைபெறும் 23-ஆம் தேதி முகூர்த்த தினம் என்பதால் அதிகளவில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்வுகள் நடைபெறும். இதனால் பெரும்பாலான மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள்.