ஜெய்பூர்:ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம், விரிவாக்கம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சிறப்புப் பணி அலுவலர் திங்களன்று தகவல் வெளியிட்டார்.
கெலாட்டின் பிந்தைய கோவிட் சுகாதார பிரச்சினைகள் குறித்து பேசிய சிறப்புப் பணி அலுவலர் லோகேஷ் சர்மா, “கோவிட்டுக்கு பிந்தைய விளைவுகளைக் கருத்தில்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் மக்களை நேரில் சந்திக்க முடியாது.
காணொலி மாநாடு, காணொலி அழைப்புகள் மூலமாக மட்டுமே சந்திப்புகள் நடைபெறும். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு அவர் காணொலி மாநாட்டோடு மட்டுமே கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காணொலி வாயிலான கூட்டங்கள் மூலம் துறை கூட்டங்கள், மறுஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.