தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரௌலி நகருக்குச் செல்ல முயன்ற தேஜஸ்வி சூர்யா கைது.! - ராஜஸ்தான்

மதக்கலவரம் நடந்த கரௌலி நகருக்குச் செல்ல முயன்ற, பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யாவை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தேஜஸ்வி சூர்யா
தேஜஸ்வி சூர்யா

By

Published : Apr 13, 2022, 6:02 PM IST

ராஜஸ்தான்:ராஜஸ்தான் மாநிலத்தில் கரௌலி நகரில், கடந்த 2-ம் தேதி நவ சம்வத்ஸர் விழாவையொட்டி, மத ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஊர்வலத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறை அலுவலர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்தது. பல இடங்களில் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக, பாஜக எம்.பி.யும், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா, பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் புனியா மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் இன்று கரெளலி நகருக்குப் புறப்பட்டார். அவர்களை தௌசா மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கரெளலி செல்ல அனுமதிக்கும்வரை, தர்ணாவில் ஈடுபடுவோம் என முழக்கமிட்டனர்.

சர்வாதிகார அரசு தங்களை தடுத்துள்ளதாகவும், கரெளலி நகருக்குச் செல்ல தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார். தங்களை கைது செய்ய, இப்பகுதியில் 144 தடை கூட இல்லை என்றும், தங்களது அடிப்படை உரிமையை ராஜஸ்தான் அரசு பறித்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து, போலீசாரின் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: லவ் ஜிகாத் சர்ச்சையில் கேரள மார்க்சிஸ்ட் பிரமுகர்!

ABOUT THE AUTHOR

...view details