தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

10ஆம் வகுப்பு மாணவி.. காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன்.. கூட்டு வன்புணர்வு! - கூட்டு வன்புணர்வு

15 வயது சிறுமியை காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் மகன் தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Rajasthan
Rajasthan

By

Published : Mar 26, 2022, 10:21 PM IST

தௌசா : நெஞ்சை பதைப்பதைக்கச் செய்யும் இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி தௌசா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் தௌசா (Dausa) மாவட்டத்தில் உள்ள மந்தவார் ( Mandawar Police Station) காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், “பிப்.24ஆம் தேதி 10ஆம் வகுப்பு படிக்கும் தனது தந்தையை காணவில்லை. எனது தங்கைக்கு முகநூல் மூலம் இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் எனது தங்கையை கடத்திச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் எனது தங்கைக்கு அறிமுகமான இளைஞர், எம்எல்ஏ மகன் மற்றும் இவர்களின் நண்பர்கள் மூவர் என 5 பேரும் எனது தங்கையை ஹோட்டலில் அடைத்துவைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் முதலில் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கியுள்ளனர். தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வெடிக்கவே, காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தக் படுபாதகச் செயலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.வின் மகனின் பெயர் தீபக் மீனா ஆகும். இவர் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ரய்யகார்க் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஹரி லால் மீனாவின் மகன் ஆகும். இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - போலீஸில் புகார்

ABOUT THE AUTHOR

...view details