மும்பை(மகாராஷ்டிரா): நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்த ஒலிப்பெருக்கிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றாவிட்டால் தனது கட்சியினர் மசூதிகள் முன்னே ஒலிப்பெருக்கிகளை வைத்து அனுமான் பாடல்களை ஒலிப்பரப்புவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உ.பி.யில் மசூதிகளில் ஒலி பெருக்கி அகற்றம் - ராஜ் தாக்ரே பாராட்டு! - உத்தரப்பிரதேசத்தில் மசூதிகளின் ஒலிப்பெருக்கிகளை அகற்றியதற்கு
உத்தரப்பிரதேச மசூதிகளில் ஒலிப்பெருக்கி அகற்றப்பட்ட விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சருக்கு ராஜ் தாக்கரே பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகாரஷ்டிராவில் ‘யோகி’ இல்லை ‘போகி’ தான் உள்ளது- மசூதிகளின் ஒலி பெருக்கியை அகற்றியதற்கு ராஜ் தாக்ரே, யோகிக்கு பாராட்டு!
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை செய்து உத்தரவிட்டதை பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் உ.பி முதலமைச்சர் யோகியை மனதார பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் துரதிர்வஷ்டமாக மகாராஷ்டிராவில் நமக்கு ‘யோகி’ கிடைக்கவில்லை. ‘போகி’(இன்பம் மட்டுமே என அதை நாடிச்செல்வோர்) தான் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:புதிதாக கட்டிய வீட்டுக்கு நரேந்திர மோடி பெயர்!