தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தென் மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தென்மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rains
Rains

By

Published : Apr 17, 2022, 7:54 AM IST

புது டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “அடுத்த 5 தினங்களுக்கு அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

அதேபோல் தென்மாநிலங்களிலும் அடுத்த 5 தினங்கள் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். வடகிழக்கில் நாளை (ஏப்.18) கனமழையும், இமாச்சலப் பிரதேச பகுதிகளில் ஏப்.19 மற்றும் 20ஆம் தேதிகளிலும் பஞ்சாப்பில் ஏப்.20ஆம் தேதியும் மிக கனமழை பெய்யக் கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சித்ரா பௌர்ணமி; கடலூர் கடற்கரையில் குவிந்த மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details