தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ளப் பாதிப்பு:அஸ்ஸாம் முதலமைச்சருடன் அமித்ஷா ஆலோசனை - ஹிமந்தா பிஸ்வா சர்மா

அஸ்ஸாமில் தொடர் மழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Assam floods
வெள்ள பாதிப்பு

By

Published : Jun 25, 2023, 5:29 PM IST

கவுகாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வடகிழக்கு மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களான பக்சா, பர்பெட்டா, தர்ராங், துப்ரி, கோல்பாரா, கம்ரூப், லக்கிம்பூர், நல்பாரி மற்றும் உடல்குரி மாவட்டங்களில் 4,07,700 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஸ்ஸாம் வெள்ளம்:அஸ்ஸாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அதிகாரிகளின் கூற்றுப்படி நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டில் வெள்ளத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பேரிடர் நிர்வாகம் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 101 நிவாரண முகாம்களை நடத்தி வருகிறது. முகாம்களில் 81,352 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் ஐந்து மாவட்டங்களில் 119 நிவாரண விநியோக மையங்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது 1,118 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன மற்றும் அஸ்ஸாம் முழுவதும் பத்து ஆயிரம் ஹெக்டேர் வயல்கள் சேதமடைந்துள்ளன. கரீம்கஞ்சு பகுதியில் இடைவிடாது மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தர்ராங் மாவட்டத்தில் பல இடங்களில் நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

அஸ்ஸாம் முதலமைச்சருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில்: வடகிழக்கு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலை சமாளிக்க மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும். இந்த கடினமான காலங்களில் அஸ்ஸாம் மக்களுடன் எப்போதும் பாஜக தலைமையிலான மோடி அரசு உறுதியாக நிற்கும் என்று கூறினார்.

மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் வெள்ளம் தொடர்பாக பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது போதுமான மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமித்ஷா தனது ட்வீட்டில் தெரிவித்தார். மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில் டெல்லி மற்றும் மும்பையிலும் பெரும்பாலான பகுதிகளில் பருவ மழை தொடர்கிறது.

டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும், மும்பையில் இரண்டு வாரங்கள் தாமதமாக மழை தொடர்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. பருவ மழையானது மும்பையின் புறநகர் பகுதியான காட்கோபர் பகுதியில் பெய்து வருகிறது.

மேலும்,இன்று காலை அம்மாநிலத்தில் தரை மற்றும் மூன்று மாடி குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் மங்கள் பிரபாத் லோதாவின் கூற்றுப்படி, 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பேர் இன்னும் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கூறினார்.

மேலும், தென்மேற்கு பருவமழையினால், ஜூன் 28 அல்லது 29ஆம் தேதிக்குள் மத்தியப் பிரதேசம் முழுவதும் பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details