தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸை டெல்லிக்கு இயக்கும் இந்தியன் ரயில்வே! - ஆக்ஸிஜன் பற்றாக்குறை

இந்தியன் ரயில்வே, டெல்லிக்கு இரண்டாவது முறையாக ஆக்சிஜன் நிரப்பிய ஆறு கொள்கலன்களில் சிறப்பு சரக்கு ரயில் மூலம் நேற்று (மே 1) துர்காபூர் அருகே உள்ள கொள்கலன் கார்ப்பரேஷன் முனையத்திலிருந்து புறப்பட்டது.

oxygen express
இந்தியன் ரயில்வே இரண்டாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸை டெல்லிக்கு இயக்குகிறது!

By

Published : May 2, 2021, 9:40 PM IST

மேற்கு வங்கத்தின் துர்காபூரிலிருந்து திரவ மருத்துவ ஆக்சிஜன் (MMO) ஆறு கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு, இந்திய ரயில்வே, இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸை டெல்லிக்கு அனுப்பியது.

இந்தியன் ரயில்வே இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

RO-RO இல்லாத முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இதுவாகும் என்று ரயில்வே அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இதிலிருக்கும் ஒவ்வொரு கொள்கலனிலும் ஆக்சிஜனின் மொத்த எடை 20.03 டன், கொள்கலனின் அகலம் 2.42 மீட்டர், ரயில் மட்டத்திலிருந்து உயரம் 3.5 மீட்டர் ஆகும். மொத்தம் 120 டன் ஆக்சிஜன்.

இந்தியன் ரயில்வே இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்
இந்தியன் ரயில்வே இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

மேலும் இரண்டு ரயில்கள் மூலம் ஹரியானாவிற்கும் ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஒரு ரயில் மூன்று கொள்கலன்கள் மூலம் 47.11 மெட்ரிக் ஆக்சிஜனையும், மற்றொன்று இரண்டு கொள்கலன்கள் மூலம் 32 மெட்ரிக் ஆக்சிஜனையும் எடுத்துச்செல்கின்றது.

இதையும் படிங்க:டெல்லி குருத்வாரில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி வழிபாடு!

ABOUT THE AUTHOR

...view details