தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

6 மாதத்தில் 68 முறை விபத்தில் சிக்கிய வந்தே பாரத்!

வந்தே பாரத் ரயில் 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயில் விபத்து புள்ளிவிவரம்
வந்தே பாரத் ரயில் விபத்து புள்ளிவிவரம்

By

Published : Dec 15, 2022, 7:00 AM IST

Updated : Dec 15, 2022, 11:39 AM IST

டெல்லி: இந்தியாவின் புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் வந்தே பாரத்(vande bharat) ரயில் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (டிச.14) பதிலளித்தார்.

அதில், கடந்த 6 மாதங்களில் வந்தே பாரத் ரயில் 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஒருமுறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இந்தியாவில் பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், வந்தே பாரத் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் அதிகபட்சமாக வந்தே பாரத் ரயில் சேவை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ரயில் சேவை டெல்லி - வாரணாசி, சென்னை - மைசூரு, மும்பை - காந்திநகர் உள்ளிட்ட 6 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சென்னை பள்ளிகளில் நிர்பயா நிதியின்கீழ் சானிட்டரி நாப்கின்: மாநகராட்சி திட்டம்

Last Updated : Dec 15, 2022, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details