தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி- இந்திய ரயில்வே - ரயில்வே செய்திகள்

நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க ஏதுவாக இ-சேவை திட்டம் செயல்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Railways
Railways

By

Published : Mar 12, 2021, 1:55 PM IST

ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க ஏதுவாக இ-சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இ-சேவை போர்ட்டலில் 15 ஆயிரத்து 812 ஒப்பந்ததாரர்களும், மூன்று லட்சத்து 81 ஆயிரத்து 831 ஒப்பந்த தொழிலாளர்களும் பதிந்துள்ளனர். இவர்களுக்கு சுமார் ரூ.3,495 கோடி குறைந்தபட்ச ஊதியமாக வழங்க ரயில்வே சார்பில் ஒப்புதல் அளித்துள்ளது.

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"இதுவெறும் ட்ரெய்லர்தான்' - முகேஷ் அம்பானிக்கு குறுஞ்செய்தி

ABOUT THE AUTHOR

...view details