கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழ்நிலையில் நாடெங்கும் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே தனது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்துவருகிறது.
இது குறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா கூறுகையில், "ஆக்சிஜனை விரைவாகத் தேவைப்படும் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வேலையை ரயில்வே செய்துவருகிறது.
ஏப்ரல் 22 முதல் 25ஆம் தேதிவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் நிறைவடைந்துவிட்டன. தற்போது 813 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் (எல்எம்ஓ) 56 முழு டேங்கர்களை கொண்டு தயார் நிலையில் உள்ளது.