டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மாநிலங்களவையில் ரயில்வே துறை சார்ந்த விவாத்தின்போது, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூலை 22) எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ரயில்வே அமைச்சகம் உலக வங்கியில் இருந்து 1,775 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.12,543 கோடி) நீண்ட கால கடனாக பெற்றுள்ளது. இது கிழக்கு பிராந்திய பிரத்யேக சரக்கு (EDFC) கட்டுமானப் பணிக்காக வாங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், உலக வங்கியில் இருந்து மூன்று தவணைகளில் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 அக்டோபர் 27, 2014 டிசம்பர் 11, 2016 அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் முறையே 555 மில்லியன் US$, 660 மில்லியன் US$560 மில்லியன் US$ தொகை பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.