புதுச்சேரி:புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று (பிப்.13) காலை பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது, ரயில்கள் புறப்படும் போதும் புறப்பட்ட பின்னரும் ரயில்வே காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.
அதன்படி, ரயில்வே காவல்துறையினர் நேற்று கண்காணிப்பில் ஈட்டுப்பட்ட போது நடைமேடையில் உள்ள சிமெண்ட் கட்டையின்கீழ் மூன்று பைகள் இருப்பதைக் கண்ட அவர்கள் அதனைப் பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அந்த பையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 314 குவாட்டர் மதுபான பாட்டில்கள் இருந்தது. இதனையடுத்து, மது கடத்தல் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மது கடத்தலில் ஈடுபட முயன்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.