தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Odisha Train Accident : மீட்பு பணி நிறைவு... மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்!

கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Odisha
Odisha

By

Published : Jun 3, 2023, 3:58 PM IST

பாலசோர் :ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் ரயில் உள்பட மூன்று ரயிகள் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 2ஆம் தேதி மாலை 7.30 மணி அளவில் ரயில்கள் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், விபத்து நடந்ததாக தகவல் கிடைத்த அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மாநில மீட்பு படையுடன் மத்திய மீட்பு படையும், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவும் இணைந்து தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஏறத்தாழ 15 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான அமிதாப் ஷர்மா கூறியதாவது. நேற்று (ஜூன். 2) இரவு எட்டு மணிக்கு தொடங்கிய மீட்பு பணி இன்று நண்பகல் வரை தொடர்ந்து நடைபெற்று வந்தன. மீட்கப்பட்டவர்கள் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் 17 ரயில் பெட்டிகள் உருக்குலைந்து இருப்பதாக அறவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 900 பேர் வரை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் லேசான காயத்தோடு இருப்பவர்கள், படுகாயமடைந்தவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் என பாதிக்கப்பட்டோரின் உடல் நலனுக்கு ஏற்ப கட்டாக், புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு பகல் பராமல் தொடர்ந்து நடந்த மீட்பு நடவடிக்கைகளின் காரணமாக உயிரிழப்பை குறைக்கப்பட்டு உள்ளது.

பகல் நேரத்தில் வெப்ப நிலையும் அதிகமாக காணப்பட்ட நிலையில் மீட்பு பணியில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பால் துரிதமாக நிறைவு பெற்றது. பாஹாநாகாவில் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது" என்றார்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், விபத்தால் உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்குப் பணிகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புப் படைகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக ரயில்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இரண்டு மருத்துவர்கள் குழு பாலசோர் மற்றும் கட்டாக் நகரங்களுக்கு விரைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க :கவாச் கருவி என்றால் என்ன? ரயில்கள் விபத்தை அது எப்படி தடுக்கும்?

ABOUT THE AUTHOR

...view details