பிகார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, மோடி - நிதிஷ் கூட்டணி பிகார் மாநிலத்தின் வளங்களை சுரண்டிவிட்டது. இந்தக் கூட்டணியை மக்கள் முறியடிக்க வேண்டும் என்றார்.
தவறான ஆட்சிக்கு இனி இடமில்லை - மக்கள் திரள் முன் முழங்கிய ராகுல் - நிதிஷ் குமார்
பிகார் தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடியையும், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
Rahul tweet
ராகுல் காந்தி தலைமையில் கொர்காவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மக்கள் திரளாக வந்திருந்தனர். இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், பொய்களுக்கும், தவறான ஆட்சிக்கும் இனி இடமில்லை என்பதை இந்தக் கூட்டம் நிரூபிக்கிறது. தாய்மார்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் இருங்கள். இத்தனை மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.