தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"வெறுப்பு அரசியலை தோற்கடித்த கர்நாடக மக்களுக்கு நன்றி" - ராகுல் காந்தி! - ராகுல்காந்தி மக்களுக்கு நன்றி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெறுப்பு அரசியலை தோற்கடித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Nafrat ka bazaar
ராகுல்

By

Published : May 13, 2023, 6:14 PM IST

"வெறுப்பு அரசியலை தோற்கடித்த கர்நாடக மக்களுக்கு நன்றி" - ராகுல்காந்தி!

டெல்லி: கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள், 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் படிக்கல்லாக அமையும் என்றும், ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்றும் நம்புவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காங்கிரசின் வெற்றி குறித்து டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கர்நாடக மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடகத் தேர்தலில் வெறுப்பு அரசியலை கையிலெடுக்காமல், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. காங்கிரஸ் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலை சந்தித்து வென்றுள்ளது. தற்போது கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏழை மக்களின் சக்தி, முதலாளிகளைத் தோற்கடித்துள்ளது. இது அனைத்து மாநிலங்களிலும் நடக்கும்" என்று கூறினார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகத் தேர்தல் வெற்றி பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Karnataka Election: 'பாஜக தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்' - பசவராஜ் பொம்மை!

ABOUT THE AUTHOR

...view details