சண்டிகர் (பஞ்சாப்): பஞ்சாபி மொழிப் பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா கடந்த மே29ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சித்துவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் இச்சம்பவம் நடந்தது.
சித்து மூஸ்வாலா கொலைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், ராகுல் காந்தி இன்று (ஜூன் 7) சித்துவின் சொந்த ஊரான மான்சா மாவட்டத்தில் உள்ள மூசா கிராமத்திற்குச்சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த கொலைச் சம்பவத்தின்போது வெளிநாட்டிலிருந்த ராகுல் காந்தி இன்று நாடு திரும்பிய நிலையில், சித்துவின் குடும்பத்தினரை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் மற்றும் மூத்த தலைவர்கள் பர்தாப் சிங் பஜ்வா, ஓபி சோனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.