தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழா - நிறைவு விழாவில் திமுக

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது.

தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது
தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது

By

Published : Jan 30, 2023, 7:28 AM IST

Updated : Jan 30, 2023, 2:32 PM IST

ஸ்ரீநகர்:கன்னியாகுமரியில் தொடங்கிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் அதிகாரப்பூர்வமாக இன்று (ஜனவரி 30) முற்றுபெறுகிறது. ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியையேற்றி நடைப்பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.

இந்த நடைப்பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் ஷேர்-இ-காஷ்மீர் மைதானத்தில் காலை 10 மணி அளவில் தொடங்குகிறது. அதில் கலந்துகொள்ள 21 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கேரள காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, சிவசேனா, மக்கள் ஜனநாயகக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிறைவு விழாவில் இசை நிகழச்சியும் நடக்கிறது. இந்த நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 4,080 கி.மீ. நடந்தது. இதனிடையே 12 பொதுக்கூட்டங்கள், 100 மாவட்ட அளவிலான கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகளில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் நேற்று (ஜனவரி 29) தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதாக தெரிவித்தார். அப்போதே பயணம் நிறைவடைந்தது. இன்று அதிகாரப்பூர்வமாக முற்றுபெறுகிறது.

இதையும் படிங்க:லால்சௌக்கில் தேசியக் கொடி ஏற்றி நடைப்பயணத்தை நிறைவு செய்தார் ராகுல் காந்தி

Last Updated : Jan 30, 2023, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details