டெல்லி :கட்ந்த 2019 ஆம் ஆண்டு கார்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தது.
மேலும் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவை செயலகம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க் கட்சிகளின் தொடர் அமளியில் மேற்கொண்டு இயங்க முடியாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில், டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ராகுல் காந்தி காலி செய்யுமாறு மக்களவை செயலகத்தின் வீட்டு வசதிக் குழு நேற்று (மார்ச் 27) நோட்டீஸ் அனுப்பியது.