தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’ஜனநாயக அடிப்படையில் உருவானவை நமது மாநிலங்கள்’ - ராகுல் காந்தி - rahul gandhi wishes 6 states formation day

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும், ஆறு மாநில உருவாக்க தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல்
ராகுல்

By

Published : Nov 1, 2021, 12:39 PM IST

டெல்லி: இந்தியா விடுதலைப் பெற்று குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டபோது, ஒன்பது மாநிலங்களும் மூன்று யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்தன.

எனினும், பின்னர் நாடு முழுவதும் வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது இந்தியா 14 மாநிலங்களாகவும், ஆறு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

ஜனநாயக விழுமியங்களைக் காப்போம்!

அதன் பின்னரும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டாலும், 1956ஆம் ஆண்டுதான் முதன்முறையாக மாகாணங்களில் இருந்து மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

இந்நிலையில், மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இன்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. என்ன விலை கொடுத்தேனும் அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.

கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ஹரியானா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவான நாளுக்கு நமது சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாநிலங்கள் உருவாக்க தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details