வாரணாசி:2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தியும், வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜய் ராய் இன்று (ஆக.18) தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் இவ்விருவரின் வெற்றிக்காகவும் காங்கிரஸ் தொண்டர்கள் நன்கு உழைப்பார்கள் என்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் செய்தியாளர்களிடத்தில் கூறியுள்ளார். கடந்த முறை அமேதி தொகுதி மக்களுக்கு ரூ.13-க்கு சர்க்கரை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றினாரா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேசம் மாநிலம், அமேதி மற்றும் கேரளா மாநிலம், வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதனைத்தொடர்ந்து, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார். இதனால், பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சிக்கும் காந்தி குடும்பத்திற்கும் கோட்டையாக விளங்கிய அமேதி தொகுதி பாஜகவின் வசமானது.
இதையும் படிங்க: Virat Kohli: 500 கி.மீ. ஓடிய அபூர்வ நட்சத்திரம்.. 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை!