தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி! - ராகுல் காந்தி கர்நாடக பயணம்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்று ஆறுதல் கூறினார். அப்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்த ராமையா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Apr 1, 2022, 4:28 PM IST

பெங்களூரு : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள்கள் பயணமாக கர்நாடக மாநிலம் சென்றுள்ளார். அவர் வியாழக்கிழமை (மார்ச் 31) மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில், “மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்குச் சென்று அஸ்வினி புனித் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன். சிறு வயதிலேயே கன்னடர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றவர் புனித் ராஜ்குமார்” எனத் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு ராகுல் காந்தி சென்றபோது அவருடன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. பாட்டீல், முன்னாள் மத்திய அமைச்சர் கேஹெச் முனியப்பா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்த ராமையா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

முன்னதாக மறைந்த ஸ்ரீ சித்தகங்கா மடபீடாதிபதி சிவக்குமார் சுவாமிஜியின் 115ஆவது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் பங்கேற்றார்.

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களின் வகுப்புகளில் ஹிஜாப் அணிந்து அமரத் தடை, இந்துக்கள் அல்லாதோருக்கு இந்து கோயில்களில் கடை போட தடை, கலால் இறைச்சி விவகாரம் என கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் கர்நாடக பயணம் அமைந்துள்ளது.

இதையும் படிங்க : கர்நாடகாவில் அமித் ஷா, ராகுல் காந்தி சுற்றுப் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details