தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’வாழ்க்கை ரகசியம் இதுதான்’ - ராகுல் பளீர்! - காங்கிரஸ் தலைவர்

சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜரான நிலையில், வாழ்தலின் ரகசியம் குறித்து முன்னதாக ட்வீட் செய்துள்ளார்.

ராகுல்
ராகுல்

By

Published : Jun 24, 2021, 1:14 PM IST

”வாழ்தலின் மொத்த ரகசியமும் நாம் பயம் இல்லாமல் இருப்பதில் தான் அடங்கியுள்ளது” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், இன்று (ஜூன்.24) அவர் குஜராத் மாநிலம், சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் வரிசையில் நரேந்திர மோடி' என விமர்சித்துப் பேசினார்.

ராகுல்

இந்த விமர்சனம் சாதி ரீதியாக இருப்பதாகக் கூறி பிரதமர் மோடியில் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ பர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் முன்னதாக தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் தற்போது ஆஜராகியுள்ளார்.

முன்னதாக, இது குறித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்டா, 'இது ஒரு போலியான அவதூறு வழக்கு. எனினும் வழக்கு விசாரணையின்போது, ராகுல் காந்தி ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை எடுத்து வைப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு குறித்து குறிப்பிடும் வகையில் தற்போது ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details