தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களில், இரண்டு கட்ட தேர்தல் முடிவுற்றநிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி மூன்றாம் கட்டத்தேர்தல் நடைபெறவுள்ளது.
எலக்ஷன் - ''கமிஷன்" என ராகுல் ட்வீட்!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் (ஏப்.4) நிறைவு பெறுகிறது. இதைமுன்னிட்டு, அரசியல் கட்சியினர் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றி வாய்ப்பை பெற ஒரு சில கட்சிகள் பணத்தை ஆயுதமாக கையில் எடுத்துள்ளதாகப் பரவலாகக் கருத்து எழுந்துவரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,’Election ’commission’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது பணப் பட்டுவாடா நடப்பதை ’கமிஷன்’ என்று குறிப்பிட்டுள்ளாரா அல்லது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.