ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு வார காலமாக கனமழை பெய்து வரும் நிலையில், ராயலசீமா பகுதியைச் சேர்ந்த திருப்பதி, சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்பூர் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
குறிப்பாக அனந்பூரின் கதிரி பஜார் நகரில் பழமையான கட்டடம் சரிந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததில், இரண்டு குழந்தைகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மொத்தம் இதுவரை 20 நபர்கள் அம்மாநிலத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், திருப்பதி செல்லும் வழியில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுவதால், திருப்பதி தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், வெள்ள பாதிப்புப் பணிகளில் உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த தனது ட்வீட்டில் ”ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர வெள்ளத்தில் தங்களது அன்புக்குரியோரை இழந்தோருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்களே, நீங்கள் உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Andhra Rains : கனமழை காரணமாக ஆந்திராவில் 20 பேர் மரணம்