தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டு மக்களின் விருப்பம் என்ன? என்பது பிரதமருக்கு புரியவில்லை - ராகுல்காந்தி! - Agnipath scheme protest reason

நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்கு புரியவில்லை என்றும், பிரதமர் தனது நண்பர்களின் குரலைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

RAHUL
RAHUL

By

Published : Jun 17, 2022, 1:56 PM IST

மத்திய அரசின் "அக்னிபாத்" திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் நலன் நிராகரிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களில் விவசாயிகள் நலன் நிராகரிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பொருளாதார நிபுணர்கள் கருத்து நிராகரிக்கப்பட்டது.

ஜிஎஸ்டியில் வர்த்தகர்கள் நலன் நிராகரிக்கப்பட்டது. நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்குப் புரியவில்லை, ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரலைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அக்னிபாத் போராட்டம்: தெலங்கானாவில் ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details