மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதை அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அஜய் மாக்கன் உறுதிபடுத்தியுள்ளார்.