ஷில்லாங்:மேகாலயாவின் ஷில்லாங்கில் இன்று (பிப். 22) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், பாஜக வகுப்புவாத கொடுமை கட்சியாகும். அனைத்தும் தெரியும் என்று யாருக்கும் மதிப்பளிப்பது கிடையாது. இந்த பாஜகவுக்கு எதிராக கூட்டாக இணைந்து நாம் போராட வேண்டும். பாஜக, மேகாலயாவின் மொழி, கலாச்சாரம், வரலாற்றுக்கு தீங்கு விளைவிக்க காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
மேகாலயா மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் விதமாக பாரம்பரிய உடையை அணிந்துள்ளேன். பிரதமர் மோடியும் அணிவார். ஆனால், உங்களின் கலாச்சாரத்தை அழித்துவிடுவார். தொழிலதிபர் அதானியின் விமானத்தில் சொந்த வீடு போல பிரதமர் நரேந்திர மோடி ஓய்வெடுக்கிறார். இதுகுறித்து கேள்வி எழுப்பினேன். நாடாளுமன்றத்தில் அதானி-மோடி புகைப்படத்தை காட்டி பேசினேன். ஆனால், மோடி பதிலளிக்கவில்லை.