டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் காங்கிரசில் நிலவும் உள்கட்சிப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், அம்மாநில கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்விதமாக டெல்லியில் ராகுல் அவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் எம்பி குர்ஜீத் சிங் ஆஜ்லா, பஞ்சாப் அமைச்சர்கள் ராஜ்குமார் வெர்கா, சரஞ்சித் சிங் சன்னி, கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்ஜீத் நக்ரா ஆகியோர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத்தும் கலந்துகொண்டார். கட்சியின் மாநிலப் பிரிவில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் ராகுல் காந்தியைச் சந்திக்கவில்லை.
முதலமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பர்கத் சிங் உள்பட பிற தலைவர்களையும் ராகுல் சந்திப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பர்கத் சிங் இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன். பஞ்சாப் காங்கிரசில் நடந்துவரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கோரிய தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
Rahul Gandhi takes lead to resolve Punjab Congress crisis, meets state l பஞ்சாபில் காங்கிரஸ் குழு கூட்டத்திற்கு முன்னதாக ராகுல் காந்தி முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னர் அவர் இரண்டு முறை பஞ்சாபிற்கான மூன்று பேர் கொண்ட குழுவையும் சந்தித்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் பஞ்சாப் முக்கியமானது.