டெல்லி:இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து ராகுல் காந்தி தனது X பக்கத்தில், “இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகட் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் (WFI) புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தனது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளைப் பிரதமர் அலுவலகம் முன்பு வைக்க திட்டமிட்டு அதற்குக் காவல் துறையினர் அனுமதி அளிக்காத காரணத்தினால், சாலையின் நடுவில் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் மிகவும் வருத்தம் தரக்கூடியதாக உள்ளது.
இந்த நாட்டின் ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை என்பது முக்கியம். பதக்கங்களும் பெருமைகள், அதன் பின்தான் இந்த துணிச்சலான வீரர்களின் கண்ணீரை விட, உங்களது பாகுபலியால் கிடைக்கும் அரசியல் ஆதாயம் முக்கியமானதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தியாவின் காப்பாளர் எனக் கூறும் பிரதமருக்கு இந்த கொடுமையில் பங்கு உள்ளது வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் விளையாட்டு வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டது. அதன் பின், சஞ்ஜய் சிங் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.