தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்! - திமுக

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Jul 7, 2021, 3:41 PM IST

டெல்லி : நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட 24க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை புதன்கிழமை (ஜூலை 7) ரூ.100-ஐ தாண்டியது.

இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியில் அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உங்கள் கார் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கக் கூடும், நரேந்திர மோடி அரசாங்கம் வரி கொள்ளையில் இயங்குகிறது” என விமர்சித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் திமுக நினைத்தால் முடியும்- அன்புமணி

டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.21க்கும், டீசல் ரூ.89.53 காசுகளும் விற்பனையாகிறது. இதேபோல் மற்ற மெட்ரோ நகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது.

நாட்டில் பெட்ரோல் விலை இன்று உச்சப்பட்சமாக சென்னை, மும்பை, ஹைதராபாத், புனே உள்ளிட்ட 24 நகரங்களில் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிவருகிறது.

இதையும் படிங்க : ரிக் லாரி கட்டணம் உயர்கிறது!

ABOUT THE AUTHOR

...view details