தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொறியில் சிக்கிக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் - ராகுல் காந்தி வேதனை - பெட்ரோல், டீசல் விலை உயர்வு

டெல்லி: பெட்ரோல், டீசல், எரிவாயு, ரயில் கட்டண விலை உயர்வின் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் பொறியில் சிக்கிக் கொண்டதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Feb 23, 2021, 2:49 PM IST

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 97 ரூபாய்க்கும், டீசல் 88 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

பயணிகள் ரயில் கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்கவுள்ளதாக வெளியான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த அவர், "கோவிட் - உங்களுக்குதான் (மக்களுக்கு) பேரழிவு, ஆனால், அரசுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

பெட்ரோல், டீசல், எரிவாயு, ரயில் கட்டண விலை உயர்வின் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் பொறியில் சிக்கிக் கொண்டுள்ளனர். பொய் வாக்குறுதிகளின் மாயை இந்தக் கொள்ளையின் மூலம் உடைந்துள்ளது" என பதிவிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.

எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இதனை கண்டித்து சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details