புதுடெல்லி: அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், ட்விட்டரில் இலங்கையையும் இந்தியாவையும் ஒப்பிட்டு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலை மற்றும் வன்முறை உள்ளிட்டவை அதிகரித்து காணப்படுகின்றன.
இதே நிலை இந்தியாவிலும் திகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் பொருளாதார பிரச்சினைகள் திசை திருப்பப்படுகின்றன” எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடிகள் காணப்படும் இலங்கையில் மக்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய தடுமாடுகின்றனர்.
ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது, 15-18 மணி நேரம் வரை மின்சார தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். இதற்கிடையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் எம்.பி., ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்தே கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் விரும்புவது ஒரே இந்துஸ்தான்- ராகுல் காந்தி