தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி வரி - ராகுல் கண்டனம்! - ஜிஎஸ்டி வரி

கரோனா தடுப்பு மருந்துக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi questions GST
Rahul Gandhi questions GST

By

Published : May 9, 2021, 11:25 AM IST

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் உயிர் வேண்டுமானலும் போகலாம்; பிரதமரின் வரி வசூலிப்பு மட்டும் போகக்கூடாது.

கரோனா தடுப்பு மருந்துக்கு 5 விழுக்காடு வரி விதித்தது குறித்து காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்கள் கேள்வி எழுப்பியுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், கரோனா தடுப்பு மருந்துக்கான ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனிடையே, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கரோனா தடுப்பு மருந்து வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details