நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவ. 07) தனது 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் நேரில் சென்றும், சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தும்வருகின்றனர்.
’நவீன தமிழ் கலாசாரத்திற்கு பங்களித்த வலுவான குரல்' - கமலுக்கு ராகுல் வாழ்த்து - கமல் பிறந்த்நாள்
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரகுல் காந்தி
இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நவீன தமிழ் கலாசாரத்திற்குப் பங்களித்த வலுவான குரல், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நற்பணி செய்ய அழைக்கும் கமல்!