தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கை வாழத் தகுதியானவர்கள்' - தடுப்பூசி குறித்து ராகுல் - ராகுல் காந்தி ட்வீட்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென இந்திய மருத்துவ சங்கம் முன்னதாக பரிந்துரைத்த நிலையில், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Apr 7, 2021, 1:09 PM IST

நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 630 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 177 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருக்கின்றன. நேற்று (ஏப்.06) ஒரே நாளில் அதிகபட்சமாக 43 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தியாவில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், தொடர்ந்து 60 வயது மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் (சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம்) அல்லாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தது.

ஆனால் இந்தியாவில் கரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம், இந்திய மருத்துவ சங்கம் முன்னதாக பரிந்துரை செய்தது.

இந்நிலையில் இதனை வலியுறுத்தும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது ட்வீட் செய்துள்ளார். அதில், "ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கை வாழத் தகுதியானவர்கள்தான். தேவைகள், விருப்பங்கள் குறித்த வாதம் செய்வது அபத்தமானது" என ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் ட்வீட்

இதையும் படிங்க:’18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி’ - இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை

ABOUT THE AUTHOR

...view details