காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 9) மாலை ஸ்ரீநகர் சென்ற அவர், பிரதேச காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர்ரின் மகனது திருமண விழாவில் பங்கேற்றார்.
பின்னர் இன்று காலை மத்திய காஷ்மீரில் உள்ள கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள துல்லாமுல்லா கிராமத்தில் உள்ள கீர் பவானி கோயிலில் வழிபாடு செய்தார். ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.