கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி, இரண்டாகப் பிளந்தது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் ராகுல் காந்தி - விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல்! - கோழிக்கோடு விமான விபத்து
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராகுல் காந்தி
இந்நிலையில், கேரளாவுக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக, கேரளா சென்ற உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக சார்பில் நடத்தப்படும் விஜயா யாத்திரையை நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மே மாதம், கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு சென்ற மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.