தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல் - போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ராகுல் காந்தி ஆறுதல்
ராகுல் காந்தி ஆறுதல்

By

Published : Aug 4, 2021, 12:42 PM IST

Updated : Aug 4, 2021, 1:35 PM IST

கடந்த ஒன்றாம் தேதி டெல்லி நங்கல் பகுதியில் 9 வயது சிறுமி அருகில் உள்ள சுடுகாட்டில் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை தேடியுள்ளனர். அந்த சிறுமியின் உடலை பூசாரி ஒருவர் சுடுகாட்டில் எரித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள், 4 பேர் சிறுமியின் உடலை எரித்துக் கொண்டிருப்பதை கண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அவர்களை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி தண்ணீர் பிடித்த போது மின்சாரம் தாக்கி இறந்ததாகவும்,எனவே உடலை எரிப்பதாக தெரிவித்தனர். ஆனால் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் சட்டம் ஒழுங்கு மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ஒரு பட்டியல் இன மகளும் நாட்டின் மகள் தான் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :ஆகஸ்ட் 7, 8இல் தமிழ்நாட்டில் மழை பெய்யும்

Last Updated : Aug 4, 2021, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details