தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லக்கிம்பூர் வருகிறார் ராகுல் காந்தி - rahul gandhi congress

காவல்துறை பிரியங்கா காந்தியை நேற்று கைது செய்து சிறைப்படுத்திய நிலையில், ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்கிம்பூர் வருகிறார் ராகுல் காந்தி
லக்கிம்பூர் வருகிறார் ராகுல் காந்தி

By

Published : Oct 6, 2021, 2:29 AM IST

லக்னோ: ராகுல் காந்தி இன்று தனி விமானத்தில் லக்கிம்பூர் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட அவர் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் வன்முறை இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளது. விவசாயிகள் பிரச்னையில் அமைச்சர் அஜய் மிஷ்ராவின் நடவடிக்கை பெரிதும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. மூன்று நாட்களாகி சிதாபூரில் இருந்து லக்கிம்பூர் செல்ல முயற்சி வந்தார் பிரியங்கா காந்தி.

காவல்துறை பிரியங்கா காந்தியை நேற்று கைது செய்து சிறைப்படுத்திய நிலையில், ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டிஸ்கர் முதலமைச்சர் லக்கிம்பூர் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவரை அனுமதிக்கவில்லை. இப்படியான சூழலில், ராகுல் லக்கிம்பூர் செல்வாரா என்பது சந்தேகம்தான். பிரியங்கா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ்காரர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details