தமிழ்நாடு

tamil nadu

ராகுல் காந்தி பகுதி நேர அரசியல்வாதி - அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாக்கு

By

Published : Sep 25, 2021, 11:34 AM IST

அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டாத ராகுல் காந்தி பகுதி நேர அரசியல்வாதி என நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Pralhad Joshi
Pralhad Joshi

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி சீனாவைக் கண்டு அஞ்சுகிறார் என விமர்சித்து காணொலி வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி காட்டமாக விமர்சித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ராகுல் காந்தியை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவை ஏதும் இல்லை. அவருக்கு வரலாறும் தெரியாது. எதிர்காலம் குறித்தும் தெரியாது.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலைமை மையாக உருவெடுத்துவருகிறது. இப்படி இருக்க பகுதி நேர அரசியல்வாதியான ராகுல் காந்தியின் பேச்சை எல்லாம் நாம் கருத்தில்கொள்ளத் தேவையில்லை. முக்கிய விவகாரங்களில் ராகுல் காந்தி குழந்தைத்தனமான கருத்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்". இவ்வாறு ராகுல் காந்தியை பிரகலாத் ஜோஷி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க:நீதிமன்ற துப்பாக்கிச் சூடு கவலை அளிக்கிறது - தலைமை நீதிபதி ரமணா வேதனை

ABOUT THE AUTHOR

...view details