கோவிட்-19 இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமாகப் பரவிவருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுடன் சேர்த்து முன்களப் பணியாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.
கரோனாவால் 165 பத்திரிகையாளர்கள் மரணம்: ராகுல் கவலை - இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை
நாடு முழுவதும் கோவிட் காரணமாக பத்திரிகையாளர்கள் உயிரிழந்ததைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
Rahul Gandhi
சுகாதாரப் பணியாளர்களுடன் சேர்த்து செய்தியாளர்கள் பலரும் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர். இதுவரை கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 165 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களை 24 மணிநேரமும் திரையில் முன்னிறுத்திவரும் நபர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலமையைப் பாருங்கள் எனக் கவலை தெரிவித்துள்ளார்.