திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவருகிறார். அந்த வகையில், நேற்று (ஜூலை 2) நிலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரது கார் சென்ற வழியில் பைக் விபத்து ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ராகுல் காந்தி உடனே காரிலிருந்து இறங்கி விபத்தில் சிக்கிய வாகனவோட்டியை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினார்.