டெல்லி : அழகிய கடற்கரை மாநிலமான கோவாவில் வருகிற 14ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக பிரமோத் சாவந்த் உள்ளார். 40 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு வருகிற 14ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 3ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
ஒருபுறம் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸூம், ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதாவும் அரசியல் காய்களை நகர்த்திவருகின்றன. இந்த நிலையில் நாளை (பிப்.2) ராகுல் காந்தி கோவா சென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.