டெல்லி: முன்னாள் காங்கிரஸ் தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த ராகுல்காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதியாக உள்ள நபருக்கு 2 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் வகுத்திருக்கும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது சட்டம். இந்நிலையில் தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும், அவருக்கான அனைத்து சலுகைகளும் இழக்கப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அரசியல் புயல் வீசிய இந்த விவகாரம் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்புவதாலும், அதனால் அவரை நாடாளுமன்ற வாசலில் கூட அனுமதிக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் பாஜகவினர் பழி தீர்த்ததாக குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்த தீர்ப்பின் எதிரொலியாக ராகுல் காந்தியின் பாஸ்போர்டும் பறிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல்காந்தி ஒரு வசனத்தை முன் மொழிந்தார். அதில் "நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, உண்மையை பேச தயங்குவதில்லை" என துணிச்சலான பேச்சை முன்வைத்தார்.