டெல்லி : 17ஆவது மக்களவையின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் ஜூலை 29 முதல் 30ஆம் தேதிகளில் ராகுல் காந்தி அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ராகுல் காந்தி ஏப்ரல் 20ஆம் தேதியன்று கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டார்.
அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அவர் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தி ஜூலை 28ஆம் தேதி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதனால் அவரால் அடுத்த இரு தினங்கள் அவைக்கு வரமுடியவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “ஜூன் 17ஆம் தேதி முதல் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சரியான இடைவெளியில் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாஜகவினர் ராகுல் காந்தி தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதது ஏன் எனக் கேள்வியெழுப்பினர். மேலும் அவரது குடும்பத்தினர் தடுப்பூசி குறித்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி!