டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2ஆம் கட்ட விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (ஜூலை 26) ஏபிஜே அப்துல் கலாம் சாலை அருகே உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லியின் விஜய் சவுக் பகுதியில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றுகொண்டிருந்தனர். இவர்களை தடுத்த போலீசார் ராகுல் காந்தியுடன் அனைவரையும் கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.